Pushpa-2 Movie: டிக்கெட் முன்பதிவு மூலம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது புஷ்பா மூவி.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் புஷ்பா-1:தி ரைஸ். இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இப் படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என திரைப் பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில்.புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. புஷ்பா-2 படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர்-5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நவம்பர்-17 மாலை 6 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னாவில் காந்தி மைதானம் என்ற இடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பல லட்ச கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் நாளை புஷ்பா-2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனையை செய்து இருக்கிறது. புஷ்பா 2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், புஷ்பா-3 திரைப்படம் எடுக்க உள்ளதாகவும், அதற்கான தொடக்கம் புஷ்பா-2 திரைப்படத்தில் முடிவு காட்சிகளாக அமையும் என்று படத்தின் இயக்குனர் தெரிவித்து இருந்தார்.