2016 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த திரைப்படத்தில் மிகவும் ஹிட்டான காமெடி புஷ்பா புருஷன். இதில் புஷ்பாவாக நடித்த நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமான நடிகையாகவே திரைப்படத்திற்கு பின் பார்க்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து தனக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்ததாகவும் இனி தான் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்ற முடிவையும் அவர் தேடி வந்த பட வாய்ப்புகளாலேயே எடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் திரைப்படத்திற்குப் பின் தனக்கு வந்த அனைத்து வாய்ப்புகளிலும் தன்னை ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர் ஆகவோ அல்லது திரைப்படத்தில் நடித்த கேரக்டர் சார்ந்த ரோல்களிலேயே நடிக்க அழைத்ததால் தனக்கு சினிமாவை வேண்டாம் என வெறுத்து வெள்ளித்தறையை விட்டு சின்னத்திரைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது நடிகை ரேஷ்மா அவர்கள் முழுவதுமாக வெள்ளித்திரையை விட்டு வெளியேறி சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒரு சில நாடகங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிகரை ரேஷ்மா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.