அரிசியில் வண்டு புழு வராமல் இருக்க.. இந்த ஒரு பொருளை போட்டு வையுங்கள்!!

0
88
Put this one thing to prevent the beetle worm from coming in the rice!!
Put this one thing to prevent the beetle worm from coming in the rice!!

நம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் முதலிடத்தில் வகிப்பது அரிசி உணவுகள் தான்.தென் இந்தியர்கள் மூன்றுவேளையும் அரிசி உணவுகளை உட்கொள்கின்றனர்.பிரியாணி,இட்லி,தோசை,முறுக்கு,இடியாப்பம் போன்ற உணவுகள் அரிசி பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

இப்படி அரிசி உணவுகள் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் அரசியில் வண்டு,புழு,பூச்சி வராமல் பராமரிக்க வேண்டியது அவசியம்.இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.

அரிசியில் புழு,வண்டு,பூச்சி வராமல் இருக்க வழிகள்:-

1)பெருங்காயம்

நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அரிசியில் ஒரு கட்டி பெருங்காயத்தை போட்டு வைத்தால் வண்டு,பூச்சி,புழு பிடிக்காமல் இருக்கும்.

2)வேப்பிலை

ஒரு காட்டன் துணியில் ஒரு கொத்து வேப்பிலையை போட்டு மூட்டையாக கட்டி அரிசி மூட்டையில் வைத்தால் புழு,பூச்சி தொந்தரவு இருக்காது.

3)கற்பூரக் கட்டி

ஒரு சிறிய காட்டன் துணியில் ஒரு கற்பூரத்தை வைத்து மூட்டை போல் கட்டிக் கொள்ளுங்கள்.பிறகு இதை அரிசி மூட்டையில் வையுங்கள்.இப்படி செய்து வந்தால் அரிசியில் புழு,பூச்சி பிடிக்காமல் இருக்கும்.

4)கிராம்பு

நான்கு நல்லது ஐந்து கிராம்பை அரிசியில் கலந்து வைத்தால் வண்டு,புழுக்கள் வராமல் இருக்கும்.

5)சிவப்பு மிளகாய்

அரிசி மூட்டையில் நான்கு அல்லது இந்து சிவப்பு மிளகாய் போட்டு வைத்தால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

6)பிரியாணி இலை

அரிசி வைத்திருக்கும் பை அல்லது பாக்கெட்டில் பிரியாணி இலையை போட்டு வைத்தால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

7)போரிக் தூள்

அரிசியில் இருக்கின்ற ஈரப்பதத்தை உறிஞ்ச போரிக் தூளை போடலாம்.இதனால் வண்டு,பூச்சி மற்றும் புழுக்கள் வராமல் இருக்கும்.

Previous articleகல்வித் தகுதி: டிகிரி!! தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் அசத்தல் வேலை வாய்ப்பு!!
Next article70 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீடு!! விண்ணப்பிப்பது எப்படி?