ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இந்தியாவிற்கு இதுவரையில் இரண்டு பதக்கங்கள் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. நாற்பத்தி 45 கிலோபளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. குத்துச்சண்டை பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இந்தியாவிற்கு இன்னொரு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா.
இப்படியான சூழ்நிலையில், ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து 21 க்கு 13 -22 க்கு 20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி அடைந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் நடந்த அரையிறுதி சுற்றில் சீன தைபே வின் வீராங்கனை பின் ஜியோ வை எதிர்கொண்டார்.
தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அவருடன் மோதிய பிவி சிந்து மிகவும் மன வலிமையுடன் விளையாடினார்.. முதல் சுற்றில் சீன வீராங்கனை விட மூன்று பிள்ளைகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை உலகின் நம்பர் ஒன் என்ற இடத்தில் இருக்கிறார் என்றால் சும்மாவா ஆம் சிந்துவிற்கு பாடம் கற்றுக் கொடுத்து விட்டார். அந்த வீராங்கனை சாதுரியமான ஆட்டத்தின் காரணமாக, முன்னேறி செல்ல சிந்துவும் தன் பங்கிற்கு புள்ளிகளை குவிக்கத் தொடங்கினார். முதல் சுற்றில் மிகவும் சமமாக சென்றது ஆனாலும் சீன வீராங்கனை ஆக்ரோஷமாக விளையாட முதல் செட்டில் 21 க்கு 18 என்ற கணக்கில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார்.