இணையம் மூலம் பழகிய மாற்றான் மனைவி! மாட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்!

0
86
Alternative wife accustomed to the Internet! Stuck real estate tycoon!
Alternative wife accustomed to the Internet! Stuck real estate tycoon!

இணையம் மூலம் பழகிய மாற்றான் மனைவி! மாட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்!

ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை ஒரு பெண் இணையதளம் மூலம், நட்பாக பழகிய சில நாட்களுக்குள் காதலிப்பதாகவும், மிகவும் நெருக்கமாகவும், பேச ஆரம்பித்து மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். அந்த நபர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று தெரிந்தவுடன் அவரிடம் பணத்தை எப்படியாவது கறக்கலாம் என்றும் அந்தப் பெண் திட்டம் போட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கண்டியூரை சேர்ந்த சரவண பார்த்திபன். 51 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஜனனி என்ற 25 வயது உடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் தனக்கு திருமணம் ஆன விஷயத்தை தெரிவிக்காமலேயே அந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் பேசி வந்துள்ளார். இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்க நினைத்து, நாளுக்கு நாள் மிகவும் நெருக்கமாக பேசிப் பழகி வந்துள்ளார்.

இதை கண்டித்த அவரது கணவனிடம் லாக்டவுன் காலத்தில் வரும் பணத்தை ஏன் விட வேண்டும். உன்னால் அவ்வளவு சம்பாதிக்க முடியுமா என வாயடைத்து விட்டார். அதைக் காரணமாக வைத்து அந்த தொழிலதிபரிடம், என் வீட்டில் பல பிரச்சினைகள் உள்ளது கடன் உள்ளது என்றும், அதில் இருந்து மீள வேண்டும் இல்லாவிட்டால் சிக்கலாகிவிடும் என ஒவ்வொரு காரணமாக கூறி சரவணனிடம் இருந்து பல லட்சங்கள் கேட்டுள்ளார்.

அவரும் அதை உண்மை என நம்பி கேட்கும் போதெல்லாம் தொழிலதிபரும் பணம் கொடுத்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் சரவணனுக்கு போரடிக்கவே அல்லது பிடிக்காமல் போகவே, அவர் முழுவதுமாக ஜனனியை ஒதுக்கிவிட்டார். அதிலிருந்து பேசுவதில்லை. அந்த சமயத்தில் வேறு ஒரு எண்ணிலிருந்து அவரை தொடர்புகொண்ட ஜனனியே அவளின் தோழி போல பேசி அவரை மீண்டும் கைக்குள் போடுவதற்கு வகைவகையாக பேச ஆரம்பித்துள்ளார்.

அது ஜனனி தான் என்று தெரியாமலேயே அவரிடமும் சரவணன் பழகியுள்ளார். மீண்டும் அதே போல எல்லை மீறிய பேச்சுக்கள் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் திடீரென ஒருநாள் ஜனனி போன் செய்து நீங்கள் என் தோழியுடன் பேசிநீர்களா? அது அவளது கணவனுக்கு தெரிந்து விட்டது. எனவே அவள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து இருக்கிறாள். எனவே நீங்கள் ஏதாவது பணம் கொடுத்து அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று அவருக்கு  சாதகமாக பேசுவதுபோல் பேசியுள்ளார்.

எனவே அவரும் சரி தருகிறேன் என்று கூறி அந்த பெண்ணிடம் பேசி சமாதானமாக சொல்லியிருக்கிறார். உடனே ஜனனி தனது புத்தியை உபயோகித்து தனது கணவனையே போலீஸ் என கூறி அந்த பணம் வாங்கி வர அனுப்பி உள்ளார். ஜனனியின் கணவரிடம் சரவணன் மீண்டும் பத்து லட்சம் கொடுத்துள்ளார். அவரோ எனக்கு இதெல்லாம் பத்தாது இன்னும் நிறைய வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

அவரை பார்த்தால் போலீஸ் போல் தெரியவில்லையே என உஷாரான சரவணன் அவரை தனக்குத் தெரிந்த தங்கும் விடுதியில் தங்க வைத்து விட்டு நான் பணம் தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று கூறி சென்று தன் நண்பர்களை அழைத்து வந்து இவரை விசாரிக்கும் வகையில் விசாரித்திருக்கிறார்கள். அப்போது அவர் எல்லாவற்றையும் உளறிக்கொண்டு விட்டார்.

ஜனனியின் மாஸ்டர் பிளான் தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் சொல்லிவிட்டார். இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் நடித்து தன்னிடம் பணம் கறப்பதற்காக இவ்வாறெல்லாம் செய்துள்ளார்கள் என்று மனம் வெறுத்துப்போய், போலீசில் புகார் அளித்துள்ளார். கும்பகோணம் போலீசில் புகாரும் அளித்துள்ளார். அந்த ஜனனி இதை தெரிந்து கொண்ட உடனே தூத்துக்குடி போலீசில் கணவரை மீட்டுத் தரக் கோரி புகார் அளித்துவிட்டு கும்பகோணம் கிளம்பி வந்துள்ளார்.

அங்கு சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஜனனி மற்றும் அவரது கணவன் பார்த்திபன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது சினிமாவில் வருவதைப் போல தம்பதியினர் ஒன்றாக சேர்ந்து இப்படியெல்லாம் வேறு ஒருவரை ஏமாற்றி பணம் பறிப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதாக தெரிவித்தனர்.

இந்தக்கதையை பார்த்தால் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற ஒரு படத்தில் வருவது போலவே, அந்த கதையை ஒட்டியே உள்ளது. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக.