CWG 2022 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் பிவி சிந்து

Photo of author

By Anand

CWG 2022 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் பிவி சிந்து

Anand

PV Sindhu wins CWG 2022 Badminton Women's Singles gold

CWG 2022 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் பிவி சிந்து

காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வீராங்கனை பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி. வி.சிந்து, கனடாவின் மிச்செல்லா லீயை எதிர்கொண்டு விளையாடினார்.

மிகவும் பரப்பரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் மிச்செல்லா லீயை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, “இந்தத் தங்கப் பதக்கத்துக்காவே நீண்ட காலம் காத்திருந்தேன். நான் இப்போது சூப்பர் ஹேப்பி” என்று மகிழ்ச்சியுடன்தெரிவித்துள்ளார்.