பிரதமருக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை!!

Photo of author

By Parthipan K

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதர சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு கையில் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையொட்டி பிரபல பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை பி.வி. சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இந்த புனித நாளில் உங்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், நீங்கள் நாட்டின் நலன் கருதி செய்த செயல்கள் அனைத்திற்கும் மிகவும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு எங்களால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் பதக்கங்களை வென்று உங்களுக்கு பரிசாக வழங்குவோம் என்று நம்புகிறேனா என்றும் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.