LPG சிலிண்டர்களில் கியூ ஆர் கோட்! இனி ஒருவரும் தப்ப முடியாது!
எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல் ,டிசல் விலையை மாற்றி அமைப்பதை போல் சிலிண்டர் விலை நிலவரத்தை மாதம் ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றனர்.அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை நவம்பர் ஒன்றாம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ116 குறைந்துள்ளது.சென்னையில் 19 கிலோ எடை உள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ 1893 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் நேற்று வரை உலக எல்பிஜி வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் தொடர்பாக பொருட்காட்சி அமைக்கப்பட்டது.
அந்த பொருட்காட்சியை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பார்வையிட்டார்.அப்போது அங்கு சிலிண்டர்களில் கியூ ஆர் கோட் பதிக்கபட்டிருந்தது அதனை பற்றி ஹர்தீப் சிங் கேட்டு விவரம் அறிந்தார்.அதன் பிறகு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அதனை பற்றி பதிவு செய்தார்.
இந்நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள சிலிண்டர்கள் அனைத்திலும் கியூ ஆர் கோட் ஒட்டப்படும்.அதன் பிறகு புதிய சிலிண்டர்களில் கியூ ஆர் கோட் வெல்டிங் செய்யப்படும்.என தெரிவித்தார். இவ்வாறு கியூ ஆர் கோட் பதிகப்படுவதன் மூலம் சிலிண்டர்கள் திருட்டு ஏற்பட்டால் அவை எங்கு உள்ளது என்பதையும் ,தவாறன முறையில் பயன்படுத்துகின்றனரா என்பதையும் உடனடியாக கண்டறிய முடியும் என தெரிவித்துளார்.