அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா !!

0
194
#image_title
அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி! இலங்கைக்கு பாய் பாய் சொன்ன இந்தியா
நேற்று(நவம்பர்2) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லாக் சுற்றில் இலங்கையை அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி பெட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
நேற்று(நவம்பர்2) மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் சுப்மான்  கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரோஹித் சர்மா 4 ரன்களுக்கு ஆட்டழந்து அதிர்ச்சி அளிக்க சுப்மான் கில் அவர்களோடு இணைந்து விளையாடிய விராட் கோஹ்லி நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினார். தொடர்ந்து விளையாடிய இருவரும் அரை சதம் அடித்த நிலையில் 8 ரன்களில் சதத்தை தவறவிட்டு சுப்மான் கில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விராட் கோஹ்லி அவர்கள் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபுறம் ரன்களை சேர்க்க மறுபக்கம் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. அரைசதம் அடித்து நிதானமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஜடேஜா 34 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் தில்சன் மதுசன்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
358 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 29 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இலங்கை அணியில் நிசன்கா, கருணரத்னே, சமரவிக்ரமா, துசன் ஹேமந்தா, சமீரா ஆகிய 5 பேட்ஸ்மென்கள் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். குஷால் மென்டிஸ், அசலன்கா ஆகியோர் தலா 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இலங்கை அணியில் சற்று தாக்குபிடித்த அஞ்சலோ மேத்யூஸ், தீக்சனா இருவரும் தலா 12 ரன்களும் கசுன் ரஜிதா 14 ரன்களும் எடுத்தனர். இதனால் இலங்கை அணி 19.4 ஓவர்களின் முடிவில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் அபாரமாக பந்துவீசி அசத்திய முகத் ஷமி 5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மறுபுறம் சிறப்பாக  பந்துவீசிய முகம்மது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7வது வெற்றியை பதிவுசெய்து முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இலங்கை அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
Previous articleMGR : எம்ஜிஆர் தான் அப்படி செஞ்சாரு…. கண் கலங்கிய சரோஜாதேவி!
Next articleஇனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!