இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

0
106
#image_title

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்வதற்கு பிரபல விமான சேவை நிறுவனமான வியட் ஜெட் விமான சேவை நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடங்கியுள்ளது.

தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை இலங்கை, மஸ்கட், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர், ஓமன், பஹ்ரைன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டை சேர்ந்த விமான சேவை நிறுவனமான வியட் ஜெட் நிறுவனம் வியட்நாம் முதல் திருச்சி வரை விமான சேவையை தொடங்கிய இருக்கின்றது.

திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த வியட் ஜெட் விமான சேவை வாரத்தின் 3 நாட்களில் திருச்சியில் இருந்து செயல்படவுள்ளது. அதாவது திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் திருச்சியில் இருந்து வியட்நாம் நாட்டுக்கு செல்லவுள்ளது. அதேபோல செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று கிழமைகளில் வியட்நாம் நாட்டிலிருந்து திருச்சிக்கும் இயக்கப்படவுள்ளது.

திருச்சி முதல் வியட்நாம் முதல் விமான சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து வியட்நாமில் இருந்து வியட் ஜெட் விமானம் நேற்று(நவம்பர்2) நள்ளிரவு 11.27 மணிக்கு திருச்சி வந்தது. வியட்நாமில் இருந்து திருச்சி வந்த வியட் ஜெட் நிறுவனம் 50 பயணிகளுடன் திருச்சி வந்தது.

அதே போல வியட்நாம் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த 100 பயணிகளுடன் இந்த வியட் ஜெட் விமானம் மீண்டும் நண்பகல் 12.40 மணிக்கு திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு திரும்பி சென்றது.

இதற்கு முன்னதாக திருச்சி டூ வியட்நாம் விமான சேவையின் தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிய வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விமானநிலைய பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் ஜலால், விமான நிறுவன மேலாளர் ஹேமசேகர், அதிகாரி இளவரசன் ஆகியோர் பங்கு பெற்றனர்.