திருப்பதியில் தரமான உணவு 24 மணி நேரமும்.. பக்தர்களுக்கு செம குட் நியூஸ்!!

Photo of author

By Divya

திருப்பதியில் தரமான உணவு 24 மணி நேரமும்.. பக்தர்களுக்கு செம குட் நியூஸ்!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருமலையில் குவிந்து தங்கள் நேத்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.இதனால் தினந்தோறும் இலவச தரிசனம்,இலவச டைம் ஸ்லாட்டட்,VIP தரிசனம் என்று பல விதமான தரிசனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசிப்பது போன்ற பல வித அம்சங்களை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகின்றது.திருப்பதியில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.இதனால் பக்தர்களுக்கு உணவு,தண்ணீர் போன்ற பல்வேறு வசதிகளை திருமலை தேவஸ்தானம் செய்து வருகிறது.

ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கின்ற பெரும்பாலான கடைகளில் உணவு மற்றும் தண்ணீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உணவுகள் தரமற்று இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் தேவஸ்தான அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.அதிகாரிகள் நடத்திய இந்த ஆய்வின் மூலம் தரமற்ற உணவுகள் விற்கும் உணவகங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.அது மட்டுமின்றி திருப்பதி வரும் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.