காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா? தமிழக அரசுக்கு பரிந்துரை!

Photo of author

By Parthipan K

அடுத்த கல்வி ஆண்டின் காலாண்டு தேர்வுகளும் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே உள்ள நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது .மேலும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஜூன் முதல் வாரத்தில் எப்பொழுதும் பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் தற்பொழுது ஜூன் மாதம் முடியும் நிலையிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

எனவே கல்வி துணை ஆணையர் ஜி.பி.தாமஸ் அவர்களின் முன்னிலையில் 18 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் அடுத்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறக்கபடுவது குறித்த பரிசீலனைகளை அரசு கேட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதியும்,கற்பிக்கப்படுவதில் உள்ள பாதிப்புகளை கருதியும் அந்த குழு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.இதில் வழக்கமாக நடைபெரும் செப்டம்பர் மாத காலாண்டு தேர்வுகள் ரத்து செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை மாலை என இரு வேளைகளிலும் வகுப்புகளை நடத்துவது,பாடத்திட்டம் குறைப்பு மற்றும் ஆன்லைன் வகுப்புகள் போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் காலாண்டு தேர்வுகள் ரத்து செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.