“கோலி சீக்கிரம் அவுட் ஆக இந்த அணுகுமுறைதான் காரணம்…” முன்னாள் வீரர் கருத்து!

0
170

“கோலி சீக்கிரம் அவுட் ஆக இந்த அணுகுமுறைதான் காரணம்…” முன்னாள் வீரர் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்போது ரன்களைக் குவிக்க ஆரம்பித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்மில் சிக்கி தவித்த விராட் கோலி நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி 276 ரன்கள் சேர்த்தார். அதில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து ஒரு அபாரமான சதத்தையும் விளாசினார்.

விரைவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் அவர் சிறப்பாக ரன் குவிக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் அவர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினாலும் விரைவிலேயே அவுட் ஆனார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர் பி சிங் “கோலி சிறப்பாகவே ஆடினார். அவர் சில நல்ல ஷாட்கள் மூலம் பவுண்டரிகள் அடித்தார். அவரின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. அதனால் அவர் விரைவிலேயே அவுட் ஆனார்” எனக் கூறியுள்ளார்.

ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் அனைத்து வீரர்களுமே முதல் பந்துமுதலே அடித்து ஆடும் ஆக்ரோஷமான விளையாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சில தேவையில்லாத ஷாட்களை ஆடி விக்கெட்களை இழக்கும் சூழலும் உருவாகி வருகிறது. ஆஸி அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.

Previous article“வெந்து தணிந்தது காடு… சிம்புவுக்கு காஸ்ட்லி கார கொடு…” ஐசரி கணேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்
Next articleவிஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்!