ரேசர்களே ரெடியா.. தமிழக அரசு வெளியிடப்போகும் தூள் அறிவிப்பு!!
தமிழக அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,சட்ட சபை கூட்டத்தொடரில் விளையாட்டு துறை சம்பந்தமான பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.அதில் சர்வதேச மற்றும் மாநில போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, அவர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் விடுதிகள் கட்டி தரப்படும் என கூறியுள்ளார்.
மேலும் Ac வசதி பொருந்திய சர்வதேச விளையாட்டு அரங்குகள் அமைத்து கொடுக்கப்படும் எனவும், கோவையில் புதிதாக கிரிக்கெட் அரங்கம் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்திருந்தார்.நான் முதல்வன்’ திட்டதின் மூலம் கூட வருடதிற்கு பத்து லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது எனவும் அதனை இனி வரும் காலங்களில் 13 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல் சென்னை மாநகரில் உள்ள 5 முக்கிய விளையாட்டு அரங்குகளின் தரத்தினை உயர்த்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது.இது போன்று பல திட்டங்களை உதயநிதி அவர்கள் விளையாட்டு துறைக்கு அறிவித்திருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டு துறை சமந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் சர்வதேச மற்றும் மாநில ,மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 3% சதவீத இட ஓதுக்கீடு முறையில் முதலில் வரும் 100 பேருக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை,விரைவாக அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பெற்று தருவது தொடர்பாகவும் ,ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை மாவட்டத்தில் நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதில் தலைமைச் செயலாளர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.