மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நோய் தொற்று பாதிப்பு! மாவட்ட ஆட்சியர்களை கடுமையாக எச்சரித்த சுகாதாரத்துறை செயலாளர்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதோடு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார்கள். ஆனாலும் இதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தால், நோய்த்தொற்று பரவலை தடுப்பது மிக சிரமமாக இருக்கிறது.

உதாரணமாக, நேற்றைய தினம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியின் போது பொது மக்கள் எல்லோரும் விநாயகர் சதுர்த்தி அவரவர் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது .ஆனால் பொதுமக்கள் யாரும் அதனை சரிவர கடைபிடிக்காத காரணத்தால், நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காவல்துறையினரும் அவர்களால் முடிந்த வரையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள் இருந்தாலும் முடியவில்லை.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அறை ஆரம்பத்தில் இருந்த சமயத்தில் ஒரு நாளைய பாதிப்பு 30 ஆயிரத்திற்கு மேல் இருந்தது. இதனை தொடர்ந்து மிகக் கடுமையான ஊரடங்கு போடப்பட்டதால் நோய்தொற்று படிப்படியாக கட்டுக்குள் வந்தது. தற்சமயம் ஒரு நாளைய பாதிப்பு இரண்டாயிரத்திற்கு கீழே பதிவாகி இருக்கிறது.இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்து வருகின்றது. இதனை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதமொன்றை அனுப்பி இருக்கின்றார்.

அந்த கடிதத்தில் பொதுமக்கள் அதிகமாக கூட வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு மிகத் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். நாளைய தினம் 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது . இதில் ஏராளமானோர் பயன் பெறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும், நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் ஆர்டிபிசியல் பரிசோதனைகளை துரிதப்படுத்த வேண்டும், நோய்த்தொற்று கண்டறியப்படும் நபர்களிடமிருந்து தொடர்பில் இருந்த எல்லோரையும் உடனடியாக கண்டுபிடித்து பரிசோதனையை வேகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதோடு வரும் 12ஆம் தேதி நடத்தப்பட்ட இருக்கின்ற தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தி இருக்கின்றார். சென்னை மாநகராட்சி மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராதாகிருஷ்ணன்.