விஜயகாந்த் குறித்தும் அவரோடு தான் நடித்தது குறித்தும் பல விஷயங்களை தன்னுடைய நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் ராதாரவி அவர்கள்.
விஜயகாந்த் குறித்து ராதாரவி கூறியிருப்பதாவது :-
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் விஜயகாந்த் உடன் தான் நடித்ததும், அந்த திரைப்படத்தில் விஜயகாந்தை பெல்டால் அடிப்பது போன்ற காட்சிக்காக அவரை தான் அடிக்க வேண்டியது இருந்தது என்றும் தெரிவித்தவர், விஜயகாந்த் அடிப்பதற்கு மிகவும் தயக்கமாக இருந்தது என்றும் அது தருணத்தில் அவர் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் திரைப்படத்திற்காக யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் தன்னை அடிக்கும் படியும் ராதாரவியை பார்த்து கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார். எப்பொழுதுமே விஜயகாந்த் அவர்கள் தற்பெருமை இல்லாத மனிதன் என்று பெருமையாக கூறியுள்ளார் நடிகர் ராதாரவி அவர்கள்.இத்தனை கால சினிமாவில் இவரை போல் ஒருவரை தான் இதுவரை பார்த்தது இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.உண்ணையில் நடிகர் விஜயகாந்த் போல ஒருவர் இனி பிறக்க போகிறாரா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.