சந்திரமுகி 2 வில் பிரபல 80ஸ் நடிகை… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

0
211

சந்திரமுகி 2 வில் பிரபல 80ஸ் நடிகை… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சந்திரமுகி2 வில் ரஜினிக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலு இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி மற்றும் RRR ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் படத்தின் பூஜை தொடங்கிய நிலையில் ஜுலை 15 ஆம் தேதி மைசூரில் உள்ள அரண்மனை ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுவரை படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்போது படப்பிடிப்பில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படத்தில் நடிகை ராதிகா இடம்பெற்றுள்ளார். அவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

சந்திரமுகி 2 வில் பிரபல 80ஸ் நடிகை… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Previous articleகாக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி!
Next articleதமிழ் சினிமாவை அலறவிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்’ பற்றி உருவாகும் வெப் சீரிஸ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here