நடிகை குஷ்பூ கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்து கட்சிக்காக வேலை செய்யப் போவதாக தெரிவித்தார். ஆனால் இதன் பின்னணியில் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. முதலில் அண்ணாமலை வெளிநாட்டிற்கு செல்ல உள்ளதால் மாநில பதவி அல்லது ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் என கூறியிருந்தனர். ஆனால் குஷ்பூ அதற்கெல்லாம் தகுதியானவர் இல்லை என்ற கருத்து மற்றொரு பக்கம் இருந்தது. இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய தகவல் கமலாலயம் மூலம் வெளியேறியுள்ளது.
குஷ்பூ திமுகவிலிருந்து காங்கிரஸ் காங்கிரஸிலிருந்து பாஜக என கட்சி மாறியது பதவிக்காக தான் எனக் கூறுகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் தனக்கு ஒதுக்கப்படும் பதவி அதில் உள்ள பவர் குறித்து பெரிதும் எதிர்பார்ப்பாராம். அந்த வகையில் பாஜகவில் இவருக்கு ஒதுக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணையம் பதவியானது பெருமளவில் பேசப்படவில்லை. கட்சி ரீதியாக வெளியே செல்ல வேண்டுமென்றாலும் ஒதுக்கப்படும் தொகையானது மிகவும் குறைவாகவே உள்ளதாம். இது எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை எனக் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் வெங்கடேசன் என்பவருக்கு தேசிய தூய்மை பணியாளர் வாரிய தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இது குஷ்புவிற்கு ஒதுக்கிய பதவி விட பல மடங்கு பெரியது என்று கூறலாம். இதுபோல தமக்கு எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, மேற்கொண்டு கட்சி ரீதியான பணிகளுக்கு கூட தனது சொந்த பணத்தை அதிகளவு ஈடுபடுத்த வேண்டியதாக உள்ளது என்பதால் இதனை வேண்டாம் என்று உதறி தள்ளியுள்ளார். அதுமட்டுமின்றி ராதிகா மற்றும் சரத்குமார் பாஜகவில் இணைந்ததும் மற்றொரு காரணம் எனவும் கூறுகின்றனர்.