ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !!
கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி முதல் பாகம் வெளியானது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனு சூட், நாசர், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி இன்றும் மக்களிடையே பேசப்படுகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து 17 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமாக இயக்குனர் வாசு இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக கூட வடிவேலு ராதிகாவுடன் இணைந்து ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என அவரது வசனத்தை ரீ கிரியேட் செய்திருந்தார். இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் நடிகை ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது எனக் கூறியுள்ளார். மேலும் தனக்கு தங்க மோதிரமும், விலை உயர்ந்த கடிகாரமும் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.