கேள்விக்குறியாகும் ரகானேவின் இடம்

0
163

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரகானேவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3-ஆவது  டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும்  அணியின் துணை கேப்டன் ரகானேவின் ஆட்டம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் 5 இன்னிங்ஸை ஆடியுள்ள ரகானே முறையே 5,1,61,18,10 ஆகிய ரன் களே எடுத்துள்ளார். இதே போல் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் ரகானே பெரிதாக சோபிக்க தவறினார்.

இந்த சூழலில் அணியில் மயங்க் அகர்வால், ப்ரித்விஷா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் ரகானேவின் இதுபோன்ற ஆட்டத்தினை ரசிகர்கள் வெகுவாக விமர்சித்துவருகின்றனர். மேலும் பல முன்னாள் வீரர்களும் சூர்யக்குமார் அல்லது ப்ரித்விஷா ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதால், ரகானே அல்லது புஜாரா இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு 4 ஆவது டெஸ்டில்  புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்  என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை ரகானேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டால் மீண்டும் அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.  33 வயதாகும் ரகானே டெஸ்ட் போட்டிகளில் 77 ஆட்டங்களில் 4742 ரன்கள் குவித்துள்ளார் அவரது சராசரி 40 ஆகும்.

Previous articleகாபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்!
Next articleபாராலிம்பிக்: இந்தியாவின் நிஷாட் குமார் வெள்ளி வென்றார்.