ராகு தோஷத்தால் கஷ்டமா? செய்ய வேண்டிய பரிகார வழிபாடு

ராகு தோஷத்தால் கஷ்டமா? செய்ய வேண்டிய பரிகார வழிபாடு

பெரும்பாலனவர்களுக்கு குறிப்பிட்ட வயதை தாண்டியும் திருமணம் நடைபெறாமல் தள்ளி கொண்டே போகும் திருமண தடை, அடிக்கடி வாழ்க்கையில் எதாவது பிரச்சனை ஏற்பட்டு கொண்டேயிருப்பது மற்றும் பணக்கஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் நம்மை தொடர்ந்து கஷ்டபடுத்தி வரும் பிரச்சனைகளில் முக்கியமானது. இவையனைத்திற்கும் முக்கிய காரணம் அவர்களது ஜாதகப்படி ராகு தோஷம் உள்ளது தான்.

இவ்வாறு கஷ்டத்தை கொடுக்கும் இந்த பிரச்சனைகள் தீர ஒரு சில பரிகார முறைகளை அல்லது விரதத்தை கடைப்பிடித்தால் படிப்படியாக அந்த பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைப்பதை காணலாம்.

ராகு தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை, வாழ்க்கையில் பிரச்சனை, பணக்கஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் தீர இந்த விரதத்தை கடைப்பிடித்தால் படிப்படியாக நிவாரணம் பெறலாம். அவற்றில் சில பரிகார வழிபாட்டு முறைகள்.

தினம் தோறும் விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய மந்திரங்களை படித்து வர வேண்டும். அதுவும் ராகு காலத்தில் இந்த மந்திரங்களை படிப்பது ராகு தோச பாதிப்பிலிருந்து விடுபட மிகவும் சிறந்தது.

தினம் தோறும் அரசு மற்றும் வேப்பமரத்தடியில் உள்ள விநாயகர் மற்றும் நாக சிலைகளை 9 முறை வலம் வருவது ராகு தோச பாதிப்பிலிருந்து விடுபட மிகவும் சிறந்தது.

ஒவ்வொருவரும் ஜாதகத்தில் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்வது ராகு தோச பாதிப்பிலிருந்து விடுபட மிகவும் பயனளிக்கும்.

நவக்கிரக பீடத்தில் அமைந்துள்ள ராகு பகவானை தினம்தோறும் வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என ஒவ்வொருவரும் தங்களுக்கான சுற்றுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வந்து ராகு பகவானை வழிபட்டு வர தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

அடுத்ததாக ராகு பகவானுக்குரிய மந்திரங்கள் தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினம்தோறும் ஒரு முறையாவது ராகு தோசமுள்ளவர்கள் சொல்லி வர வேண்டும் அவ்வாறு செய்தால் அதன் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

ராகு கேது தோஷம் எப்படி கண்டுபிடிப்பது,ராகு கேது தோஷம் நிவர்த்தி,ராகு கேது தோஷம் என்ன செய்யும்,ராகு கேது தோஷம் calculator,ராகு கேது தோஷம் எப்போது முடியும்,ராகு கேது தோஷம் திருமணம்,ராகு கேது தோஷம் ஜாதகம்,ராகு கேது தோஷம் நீங்க மந்திரம்,ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்,ராகு தோஷம் நீங்க எளிய பரிகாரம்,ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதகரை மணம் புரியலாமா?,ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?,ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் ஜாதககரை மணம் புரியலாமா?,ராகு கேது தோஷம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா?