ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ!

0
235

ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! முழு விவரங்கள் இதோ!

புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப்படக்கூடிய மேஷராசி அன்பர்களே. உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மேஷ ராசிக்கு ஜென்ம ராசியிலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மேஷ ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

 

 

ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் :வித்தியாசமான சிந்தனைகளும், பழக்கவழக்கங்களில் மாற்றங்களும் உண்டாகும். மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பதற்கான திறமையும், வாய்ப்பும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

 

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நீண்ட நாள் தடைபட்டு வந்த பூர்வீக சொத்துக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய கற்பனை வளம் மேம்படும். விவசாய துறைகளில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சி பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். வித்தியாசமான பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வதன் மூலம் சேமிப்புகளை அதிகரிக்க இயலும்.

 

ராகு கேது பெயர்ச்சியினால் உடல் மற்றும் ஆரோக்கியம் :உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பார்வை சார்ந்த இன்னல்கள் நீங்கும்.

 

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நுட்பமான சிந்தனைகளை செயல்படுத்தும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். உத்தியோகம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடத்தில் சூழலுக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைபட்டு வந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது பொருளாதார நெருக்கடிகளை குறைக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உனக்கு

 

ராகு கேது பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு தகுதிகளுக்கேற்ப உயர்வான வாய்ப்புகள் ஏற்படும். முயற்சிக்குண்டான உயர்வும், பாராட்டுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களையும், ரகசியங்களையும் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

 

 

ராகு கேது பெயர்ச்சி நாள் ஏற்படும்நன்மைகள் :

ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதில் வித்தியாசமான சிந்தனைகளும், பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்களும் உண்டாகும்.

 

கவனம் தேவை:வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவரிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

 

வழிபாடு முறை:ராகு நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் நீங்கி, எண்ணங்களில் தெளிவு ஏற்படும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

Previous articleஇதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !!
Next articleஉங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!!