மகர ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!  

0
161

மகர ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தன்னம்பிக்கை தளராத மகர ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மகர ராசிக்கு சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மகர ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

ராகு கேது பெயர்ச்சிபலன்கள் :நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவர் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.

ராகு கேது பெயர்ச்சியினால் பொருளாதாரம் நிலை :

நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் எதிர்பாராத விதத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பழைய தொழில் சார்ந்த இடங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். மருத்துவம் தொடர்பான துறைகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பலதரப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடை மற்றும் ஆபரணம் தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உதவி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மூலம் உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் புதிய தெளிவு பிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். திறமைகளை வெளிப்படுத்தி அதற்கு உண்டான உயர்வினை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய வேலைக்கான முயற்சியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மைகள் :

ராகு கேது பெயர்ச்சியின் மூலம் எண்ணம் மற்றும் செயல்பாடுகளில் புதுமை உண்டாகும்.

கவனம் தேவை :

தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்படுவதன் மூலம் மேன்மை ஏற்படும்.

வழிபாடு முறை :

வெள்ளிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர தொழில் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும்

Previous articleதனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??
Next articleஅனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!