தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

0
65

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

பொறுமையுடனும், நிதானத்துடனும் சிந்தித்து செயல்படக்கூடிய தனுசு ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் தனுசு ராசிக்கு புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். எண்ணிய காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதற்கான தருணங்கள் உண்டாகும். குழந்தைகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகளும், அலைச்சல்களும் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது லாபத்தை மேம்படுத்தும்.

எதிர்பாராத வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தேவையற்ற அலைச்சல்கள் குறையும். எதிலும் முன் கோபத்துடன் இல்லாமல் பொறுமையுடன் செயல்பட்டு காரிய வெற்றிகளை அடைவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த ஒரு விதமான கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும்.

ராகு கேது பெயர்ச்சியினால் பொருளாதார நிலை :

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் மறைமுகமான ஆதரவின் மூலம் மேன்மை உண்டாகும். வாகன பழுதுகளை அவ்வப்போது சீர் செய்து கொள்ளவும். தடைபட்ட தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்கு ஜாமீன் அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும்.

 

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :

கணவன், மனைவிக்கிடையே மற்றவர்களின் தலையீடுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வித்தியாசமான பொன், பொருள் மற்றும் ஆடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமான புதிய தம்பதிகள் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது. எழுத்து சார்ந்த துறைகளில் கற்பனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த துறைகளில் பொறுப்புகளும், மதிப்புகளும் மேம்படும்.

 

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு : மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ஆடம்பரம் மற்றும் உணர்ச்சி சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். பிற மொழி மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கணினி சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறைந்து சுதந்திரமும், கலை ரசனையும் அதிகரிக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சியில் கவனம் தேவை :எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மேலும் உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் ஏற்படும்.

வழிபாடு முறை :பெளர்ணமிதோறும் குலதெய்வ வழிபாட்டை செய்துவர சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

author avatar
Parthipan K