ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!  

0
215

 

ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!

 

எதிலும் துல்லிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகுவானவர் துலாம் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேதுவானவர் ஜென்ம ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.

 

 

ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்கள் :திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் உழைப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். தனவரவுகள் சாதகமாக இருந்தாலும், எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

 

நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட சிறு சிறு விவாதங்கள் படிப்படியாக குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இனம் புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமும், செயல்பாடுகளில் விரக்தியும் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.

 

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எந்தவொரு முடிவாக இருந்தாலும் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் நீங்களாகவே முடிவு எடுப்பது மேன்மையை உருவாக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் புதிய தொழில்நுட்ப கருவிகளின் ஆலோசனைகளும், பயன்பாடுகளும் அதிகரிக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சியினால் பொருளாதார நிலை:எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் பேராசை இன்றி செயல்படவும்.

 

ராகு கேது பெயர்ச்சினால் உடல் மற்றும் ஆரோக்கியம் :உடல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதிற்கு பிடித்த விதத்தில் உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :கணவன்-மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களின் வகையில் ஆதரவும், அலைச்சலும் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

 

ராகு கேது பெயர்ச்சிஉத்தியோகஸ்தர்களுக்கு :உத்தியோக பணிகளில் கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திறமைக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். பணி நிமிர்த்தமான அலைச்சல்களின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். சீருடை தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :உயர்நிலை சார்ந்த கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து அவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். மனதில் தோன்றும் கருத்துக்களை பெற்றோரிடம் கலந்துரையாடி முடிவெடுக்கவும்.

 

ராகு கேது பெயர்ச்சியின் நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் பிற மொழி பேசும் புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.

கவனம் தேவை:மனதில் ஒருவிதமான சோர்வு மற்றும் பழைய நினைவுகளும் அதிகரிக்கும்.

வழிபாடு முறை:வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர சிந்தனைகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

Previous articleமரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..
Next articleசிறுநீரக பிரச்சனைக்கு மருத்துவர்கள் கூறுவது! இவை அனைத்தும் தான் அறிகுறிகள்!