2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

0
128

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

வேகமும், நிர்வாகத் திறமையும் கொண்டிருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சிம்ம ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

 

 

மேலும் செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுகமான தடைகள் குறையும். பொருள் வரவும், மதிப்புமும் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் பிரபலமானவர்கள் மற்றும் அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

 

மனதிற்குப் பிடித்த விதத்தில் வீடு மற்றும் வாகனத்தை மாற்றி கொள்வீர்கள். மனதை உறுத்தி கொண்டிருந்த சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளின் மூலம் கவலைகளும், எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். எதிலும் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது உங்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.

 

மேலும் சகோதரர் வகையில் அனுசரித்து நடந்து கொள்வது நல்ல பலனை அளிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளை நிதானத்தோடு கையாண்டால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. சிறு தூரப் பயணங்களின் மூலம் அலைச்சல்களும், ஆதாயமும் உண்டாகும். நண்பர்களுடனான கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

 

ராகு கேது பெயர்ச்சியினால் பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் படிப்படியாக மறையும். எதிர்பார்க்காத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பர எண்ணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

உடல் மற்றும் ஆரோக்கியம் :

தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். காது தொடர்பான இன்னல்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தந்தை வழியில் விரயங்கள் உண்டாகும்.

 

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :

கர்ப்பிணி பெண்கள் உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். மனதை உறுத்தி கொண்டிருந்த நீண்ட நாள் கவலைகள் குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் தங்கள் வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு மறையும். இறை சார்ந்த நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும்.

 

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த சோம்பல் குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். உயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். தனிப்பட்ட விஷயங்களில் பல தரப்பட்ட மாற்றங்கள் உண்டாகும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

 

ராகு கேது பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வும், வீண் பழியும் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திறமைகள் வெளிப்பட்டு அங்கீகாரங்களை கிடைக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், மதிப்புகளும் மேம்படும். கணினி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

ராகு கேது பெயர்ச்சி வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகளை புதிய தொழில்நுட்பம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களை கொண்டு எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். திறமைமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.

 

ராகு கேது பெயர்ச்சியின்நன்மைகள் :

ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

 

கவனம் :

உடன்பிறந்தவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மேலும் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

 

வழிபட வேண்டிய தெய்வங்கள் :

வெள்ளிக்கிழமைதோறும் நாக தேவதைகளை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும். சிம்ம ராசி அன்பர்களே இந்த இராகு கேது பெயர்ச்சி அனைவருக்கும் நல்ல பலனை அளிக்கும்.

author avatar
Parthipan K