புதுச்சேரி மாநிலம் ராகுல் காந்தியின் திடீர் வருகை! காரணம் என்ன தெரியுமா?

Photo of author

By Sakthi

புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான செய்வதும், மத்திய அரசு ஆளுநரை மாற்றுவதும் என்று அங்கே மிகப் பெரிய பரபரப்பான சூழ்நிலை அரசியல் ரீதியாக நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் காலை சுமார் 11 மணி அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவர்களுடன் உரையாற்ற இருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி, மாலை 3 மணி அளவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது இருந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை முக்கியமாக பார்க்கப்படுகிறது.