கே எல் ராகுலுக்கு முழு ஆதரவும் உண்டு… இந்திய அணியில் இருந்து ஆதரவாக வரும் குரல்!

0
228

கே எல் ராகுலுக்கு முழு ஆதரவும் உண்டு… இந்திய அணியில் இருந்து ஆதரவாக வரும் குரல்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டதற்குப் பின்னர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் இப்போது இந்திய அணியில் மற்ற வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் பேட்டிங் மிக சிறப்பாக இருக்கும் நிலையில் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் இரு போட்டிகளிலும் சொதப்பி வருகிறார். பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். கே எல் ராகுலின் பேட்டிங் பார்ம் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுல் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “கே எல் ராகுலுக்கு எங்கள் அணியின் முழு ஆதரவும் உண்டு. டி 20 போட்டிகளில் தொடர்ந்து அவர் சிறப்பான பல இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். அவரால் மீண்டும் சிறந்த ஆட்டத்துகு திரும்ப முடியும். டி 20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவது அவ்வளவு எளிதில்லை” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் “ராகுலுக்கு மாற்று வீரராக நாங்கள் யாரையும் யோசிக்கக் கூட இல்லை. வெறும் இரண்டு போட்டிகளை வைத்து அவரைப் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேனைக் குறை சொல்வது சரியில்லை. அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை நீக்க வேண்டிய தேவை அணிக்கு இல்லை” எனக் கூறியிருந்தார். அதனால் ராகுலுக்கு இந்திய அணியில் முழு ஆதரவு உள்ளது தெளிவாகியுள்ளது.

Previous articleமீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Next articleகுஜராத் தொங்கு பாலம் விபத்து போல மீண்டும் நடக்காமல் இருக்க அன்புமணி ராமதாஸ் கூறிய ஆலோசனை 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here