ராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா? உச்சநீதிமன்றம் அதிரடி
குஜராத் அரசு அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹரிஷ் வர்மாவுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கியதுடன் இவருடன் சேர்த்து மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக ஆணையிட்டது.
இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மேலும் சீனியாரிட்டி முறையை பின்பற்றவில்லை என்றும் இட ஒதுக்கீடு மூலமாக சட்ட விரோதமாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று மனுவில் குறிபிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு அவசர கதியில் எதற்கு இந்த 68 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர், சீனியாரிட்டி முறையை ஏன் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குஜராத் அரசின் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.