தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை காரணமாக, மூன்று நாள் பயணமாக வந்திருக்கின்ற ராகுல்காந்தி தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரப்புரை செய்து வருகின்றார். அந்த விதத்தில் அவர் மத்திய, மாநில அரசுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
ஆளும் கட்சியான அதிமுகவை டெல்லியிலிருந்து பிரதமர் மோடி ரிமோட் மூலமாக இயக்கி வருவதாகவும் சிபிஐ வழக்கிற்கு பயந்து போன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாடு காமராஜருடைய என்று தெரிவித்த அவர் அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர். அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடும் இந்தியாவிற்கு முன்னோடியாக இருந்தது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல இடங்களில் பரப்புரை செய்த ராகுல் காந்தி, அடைக்கலப் பட்டினத்தில் அமைந்திருக்கின்ற ஒரு டீக்கடையில் தேநீர் குடித்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அந்த தேநீர் பருகிய பின்னர் ராகுல்காந்தி அந்த கடையின் உரிமையாளர் மீது கை போட்டு அவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே மிகவும் சுவையான டீ இதுதான் என்று தெரிவித்து அந்த கடையின் உரிமையாளருக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்திருக்கிறார். அவருடைய பெயரை கேட்டு தெரிந்து கொண்ட ராகுல் காந்தி, முருகேசன் நன்றி வணக்கம் என்று தெரிவித்து விடைபெற்று போயிருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி போகுமிடமெல்லாம் தமிழக மக்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.