ராகுல் காந்தி பேசிய வார்த்தையினால் 2 ஆண்டு சிறைதண்டனை!! சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!
காந்திநகர்: 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி மோடி யை ஜாதி பெயர் சொல்லி பேசியதால் அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்து பின்னர் ஜாமீனும் வழங்கியது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் சென்ற காங்கிரஸ் கட்சி எம் பி ராகுல் காந்தி கோலாரில் உரையாற்றி கொண்டிருந்த போது பிரதமர் மோடி அவர்களின் ஜாதி பெயர் கூறி அழைத்துள்ளார். இது அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பாஜக முன்னால் அமைச்சரும், எம் எல் ஏ வுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நான்கு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்:
ராகுல் காந்தி வழக்கு குறித்து ஆஜர் ஆவதற்கு சூரத் வந்தார். அப்போது கட்சியினர் ஆதரவளித்து நின்றனர். இந்துஸ்தானின் சிங்கம் என்றும் வழிகளில் போஸ்டர்கள் ஒட்டியும் அவரை உற்சாகப்படுத்தினர். பின்னர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
பின்பு சூரத் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட், ராகுல் காந்தியை அவதூறு வார்த்தைகள் கூறி பேசியதால் குற்றவாளி என தீர்ப்பளித்தார். உடனே ஒரு மாதத்திற்கு ஜாமீன் கொடுத்து அவர் மீதுள்ள வழக்கு தண்டனையை மேல் முறையீடு செய்ய அனுமதி தந்துள்ளார்.