பொதுமக்கள் தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, மத்திய அரசு டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் குறைந்த அளவே தடுப்பூசி தயாரிக்கப்படுவதால், தினந்தோறும் தடுப்பூசி முகாம்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுகளிடம் தடுப்பூசி கேட்டு வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி குறைந்த அளவே கிடைப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை சாடியுள்ளார். பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காமல் அல்லல் படும் நேரத்தில் மத்திய அரசு டிவிட்டர் புளு டிக் கிடைக்கவில்லை என சண்டையிட்டுக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
ब्लू टिक के लिए मोदी सरकार लड़ रही है-
कोविड टीका चाहिए तो आत्मनिर्भर बनो!#Priorities— Rahul Gandhi (@RahulGandhi) June 6, 2021
இதே போன்று, கடந்த வாரம் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து விளக்க வேண்டும் என்றும், ஆம்பிடெரிசின் மருந்து குறித்தும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.