அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்!!

Photo of author

By Sakthi

அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்! இப்படியும் வாக்கு சேகரிப்பு நடத்தும் காங்கிரஸ்.
இன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேருந்தில் பயணித்து பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று மாலையுடன்  பிரச்சாரம் முடிவடைகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பேருந்தில் இருந்தவர்களுடன் கை குலுக்கி செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார் ராகுல் காந்தி அவர்கள். இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.