+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா?

0
146
+2 Publish Exam Results!
+2 Publish Exam Results!

+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா?

தமிழ்நாட்டில் இன்று  காலை 10 மணியவில் +2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

இந்த ஆண்டுக்கான +2 தேர்வுகள் 3,324 மையங்களில் மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது.

தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவ மாணவிகள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206  மாற்றுத்திறனாளிகள், 6 திருநங்கைகள், 90 சிறை கைதிகள் என மொத்தமாக 8.65 லட்சம் பேர் தேர்வு எழுதப் பதிவு செய்தனர்.

மொத்தம் 8.65 லட்சம் பேர் தேர்வு எழுதப் பதிவு செய்த நிலையில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு காரணங்களால் 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதப் பங்கேற்கவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

தேர்வு எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் 79 மையங்களில் ஏப்ரல் 10 முதல் 21ம் தேதி வரை திருத்தும் பணி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இந்த கல்வி ஆண்டில் மொத்த தேர்ச்சி 94.03 சதவிகிதமாகும்,தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி நந்தினி 600/600 தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தாண்டு சுமார் 51 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்வு எழுதிய 6 , திருநங்கைகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த +2 தேர்வில் தேர்வு எழுதிய 90 சிறை கைதிகளில் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதமும் மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர், இந்த கல்வி ஆண்டில் வெளியான தேர்வு முடிவுகளில் எப்போதும் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K