ராகுல்காந்தி கொடுத்த மெசஜ்.. அப்செட்டான விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி!! சுக்குநூறாக போன திட்டம்!!

Photo of author

By Rupa

DMK Congress: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பிரிவு என கூறிய தகவல்கள் பொய் என ஆணித்தரமாக கூறும் நிலையில் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் ட்விட்டர் போஸ்ட் உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது வெளிநாட்டு முதலீட்டை ஈட்டுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். தினந்தோறும் அவர் அமெரிக்காவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மேற்கொண்டு மக்கள் கொடுக்கும் வரவேற்பு என பல செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது. அதிலும் நேற்று மாலை அவர் சாலையில் பாட்டு பாடி கொண்டு சைக்கிள் ஓட்டும் ட்விட்டர் போஸ்டானது மிகவும் வைரலானது. இந்த ட்விட்டர் போஸ்ட்டை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ரீட்வீட் செய்து சென்னையில் இதே போல் நம் இருவரும் சேர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் அது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின், கட்டாயம் உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது சென்னை வாருங்கள், இதே போல பயணம் மேற்கொள்ளலாம் என கூறியதோடு உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் தற்பொழுது வரை பெண்டிங்கில் உள்ளது. கட்டாயம் நீங்கள் சென்னைக்கு வரும் பொழுது எனது வீட்டில் தென்னிந்திய உணவு சாப்பிடுவோம் என கூறினார். இவர்கள் உறவானது பரஸ்பரமாக உள்ளது என்பதை எதிர்க்கட்சி என தொடங்கி வளர்ந்து வரும் கட்சி தலைவர்களுக்கு உரைக்கும் படி தங்களது போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஆளுநருடன் தேநீர் விருந்து, கலைஞரின் நாணயம் வெளியிட்டு விழா என முற்றிலும் காங்கிரசை எதிர்க்கும் விதமாகத் தான் திமுகவின் செயல்பாடுகள் இருந்தது. இதை வைத்து அதிமுக என தொடங்கி பல கட்சிகளும் காங்கிரஸ் திமுகவிற்கிடையே விரிசல் ஏற்பட்டு விட்டதாக கூறினர். அதேபோல விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்று எண்ணியிருந்த அனைத்து திட்டமும் இதன் மூலம் அத்துபடியாகியுள்ளது.