ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நாளை பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

0
279

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பமான அவருடைய நடைபயணம் கேரளா, ஆந்திரா, மூலமாக, தெலுங்கானா சென்றடைந்தது.

ஆகவே ராகுல் காந்தி நடைபயணம் மராட்டியதிற்குள் நேற்று முன்தினம் இரவில் நுழைந்தது. நாத்தெட் மாவட்டம் தெக்லூரில் இருக்கின்ற சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவருடைய நடை பயணத்திற்கு மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா வடோலே, முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோக் சவான் நிருபர்களை சந்தித்து இன்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாளை ஒன்றிணைந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் சிவ சேனாவின் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் வருகின்ற 11ஆம் தேதி இந்த பாத யாத்திரையில் பங்கேற்றுக் கொள்வார்கள். இதே போல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ஜெயந்த் பாட்டில், சுப்ரியா சுலே மற்றும் ஜிதெந்திர ஆவாத் உள்ளிட்டோர் இந்த பாதயாத்திரைகள் நாளை பங்கேற்று கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Previous articleசாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்!
Next articleபாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்…  முதல் அரையிறுதி போட்டி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here