பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்…  முதல் அரையிறுதி போட்டி!

0
76

பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்…  முதல் அரையிறுதி போட்டி!

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது.

இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்து வருகிறது. 10 ஓவர்களைக் கடந்துள்ள நிலையில் 59 ரன்கள் மட்டுமே சேர்த்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது நியுசிலாந்து. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களத்தில் விளையாடி வருகிறார்.

நியுசிலாந்து தொடக்க வீரர் பின் ஆலெனை ஷாகின் அப்ரிடி எல் பி டபுள் யு முறையில் அவுட் ஆக்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வாய் ஷதாப் கானால் ரன் அவுட் ஆக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் நியுசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் கிளென் பிலிப்ஸ் நவாஸ் ஓவரில் ரன் அவுட் ஆனார்.

தற்போது களத்தில் கேப்டன் கேன் வில்லியம்சனும், மிட்செல்லும் ஆடி வருகின்றனர். நியுசிலாந்து அணி நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் அணியாக இருந்து வருகிறது. அதே போல பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் நியுசிலாந்திடம் தோல்வி அடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.