ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து!

Photo of author

By Sakthi

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து!

Sakthi

Updated on:

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து!
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாளை அதாவது 21ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில் இந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தி அவர்களின் தந்தையுமான ராஜீவ் காந்தி அவர்களின் நினைவுநாள் 21ம் தேதியாகும். இதையடுத்து சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி அவர்கள் நினைவஞ்சலி செலுத்துவதற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ராகுல் காந்தி அவர்களின் இந்த பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி “ராஜிவ் காந்தி அவர்களின் 32வது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி அவர்களுடைய நினைவிடத்தில் மே 21ம் தேதி காலை 8 மணியளவில் நடக்கும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் ராகுல் காந்தி அவர்கள் கலந்துகொள்ள மாட்டார். அவரது வருகை ரத்து செய்யப்படுகிறது” என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.