“ராகுல் ஜின்னாஹ்” என்று ராகுல் காந்திக்கு பெயர் சூட்டிய பா.ஜ.க தலைவர்

Photo of author

By Parthipan K

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “என் பெயர் ராகுல் காந்தி.. ராகுல் சவார்க்கர் அல்ல. உண்மை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் மட்டும் அல்ல எந்த காங்கிரஸ் காரரும் கேட்க மாட்டார். நரேந்திர மோடி மற்றும்  அமித்’தான் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக  இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஒரு பொது கூட்டத்தில் பேசும் போது    ” மோடி, மேக் இன் இந்தியா’வை உருவாக்குவதாக சொன்னார் .. ஆனால் தற்போது ரேப் இன் இந்தியாதான் உருவாகிக் கொண்டிருக்கிறது ” என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க  பலவகையிலும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வந்தது .அதோடு பாராளுமன்றத்திலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்ப பட்டன. அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் டெல்லி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருந்தார்

ராகுலுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க தேசிய பேச்சாளரான G.V.L. நரசிம்ம ராவ் “ராகுல் காந்திக்கு , ராகுல் ஜின்னாஹ் என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும், ஏனெனில் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் அரசியில் பாணி அவருடையது , இந்த வகையில் அவரை முஹம்மத் அலி ஜின்னாஹ்வின் அரசியல் வாரிசாகவே கருதலாம் ” என்று கூறியுள்ளார்.