12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

Photo of author

By Parthipan K

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

Parthipan K

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் ராகுலைப் பற்றி சக வீரரான தவான் வானளாவப் புகழ்ந்துள்ளார்.

தோனிக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வந்ததை அடுத்தும் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்தும் கே எல் ராகுல் பின் வரிசை ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்படவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் இந்த எதிர்பாராத சூழ்நிலை நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான ராகுல் பின் வரிசையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நியுசிலாந்துக்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் அவர் சேர்த்துள்ள மொத்த ரன்களே அதற்கு சாட்சி. 8 இன்னிங்ஸ்களில் அவர் 428 ரன்களை சேர்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடைசி ஒருநாள் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இறங்கி சதமடித்து அசத்தினார். அதனால் இப்போது நம்பிக்கை அளிக்கும் பின் வரிசை வீரராக மாறிவரும் அவரை விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சக வீரரான ஷிகார் தவான் ராகுலைப் பற்றி ‘அவர் 12 ஆவது இடத்தில் இறங்கினாலும் சதமடிக்கும் திறமை கொண்டவர்’ எனக் கூறியுள்ளார். காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட தவான் விரைவில் அணிக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.