கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் வெளி மாநிலங்களில் பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.அதே நேரத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தும் வழக்கம் போல இயங்கி வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதுமாக பயணிகள் ரயில்,விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த தகவல் குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கமானது.நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து என்பது தொடரும் என ஏற்கனவே ரயில்வே வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும் ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்து ரயில் சேவை எப்போ தொடரும் அல்லது மீண்டும் தடை நீடிக்குமா என்பது குறித்தெல்லாம் ரயில்வே நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை ரத்து என்பது தொடரும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியான நாளை ரயில் சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகுமா என பலர் எதிர்பார்த்துள்ளனர்.