17 மாவட்டங்களுக்கு RAIN ALERT – வானிலை ஆய்வு மையம் கொடுத்த புதிய அப்டேட் !!

Photo of author

By Rupa

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை   தொடங்கிய நிலையில் தமிழகத்தில் முந்தைய வாரம் முதல் பல மாவட்டங்களில் மித மற்றும் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,  சென்னை பொருத்த வரையில் காலை 6 மணியளவில் மழை பெய்தது, குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம். வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.மற்றும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் 17 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை,  கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.