சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

0
197

சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம்,திருச்சி,தர்மபுரி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக,சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

Previous articleசெப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு!
Next articleகரீபியன் லீக் : பொல்லார்ட் அதிரடியால் கடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here