செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு!

0
56

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நீதிமன்றங்கள் திறப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் உயர் நீதிமன்றம் மூடப்பட்டு கணினி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பல்வேறு கட்டமாக ஊரடங்கு தளர்வு படுத்தப்பட்டு வருவதால்,ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு முடிந்து,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக இருக்கிறது.இந்நிலையில் பல்வேறு தளர்வுகளை அளித்த தமிழக அரசு,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் உயர் நீதிமன்றம் திறக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நேரடி விசாரணையை தொடங்க,தலைமை நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட நீதிமன்ற நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது.முதல் கட்டமாக இரண்டு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வுகள் மட்டும் வழக்குகளில் நேரடி விசாரணையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.சுமார் 160 நாட்களுக்கு பிறகு நீதிமன்றங்களில் வழக்குகள், வருகின்ற ஏழாம் தேதி முதல் நேரடி விசாரணை மேற்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra