தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்!

0
175

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில்,இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமரி,தென்காசி, ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,விருதுநகர், சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா மற்றும் லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் குலச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை கடலலைகள் 2.5 மீட்டர் 200 மீட்டர் வரை எழும்பும் என்றும்,எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Previous articleவடகொரிய அதிபரின் சகோதரி மர்மம்
Next articleஎங்களுக்கு போரை தூண்ட எந்த எண்ணமும் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here