எங்களுக்கு போரை தூண்ட எந்த எண்ணமும் இல்லை

0
192
பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா ராணுவம்  மறுத்து உள்ளது. நாங்கள் ஒருபோதும் மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், சீனா ஒருபோதும் எந்தவொரு போரையும் மோதலையும் தூண்டவில்லை, சீன ராணுவம்  ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோவின் தென் கரையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை.
சில தகவல்தொடர்பு சிக்கல்கள் இருந்திருக்கலாம். இரு நாடுகளும் தொடர்ந்து உறவுகளில் நல்லெண்ணத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும். இரு தரப்பினரும் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் நல்லெண்ணம் இருக்க வேண்டும்.  எல்லையில் அமைதியைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Previous articleதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்!
Next articleதமிழகத்தில் மேலும் 5928 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here