Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

0
168

Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கையை நேற்று இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதவாறு:

தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது எனவும்,மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் காரைக்கால் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் 19-ம் தேதி வரை ஆங்காங்கே மழை பெய்யும் என்றும்,குறிப்பிட்டிருந்தது.

அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஓர் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிட்டதவாறு:

வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி,சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் தஞ்சாவூர் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleநாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
Next articleIPL 2023: குஜராத் டைட்டன்ஸின் முக்கிய வீரர் விலகல்! இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடுமா?