தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Photo of author

By Anand

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Anand

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

இலங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

 

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னையில் அதிகபட்சம் 35 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது