தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை- வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு 

0
134
Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022
Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை- வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் இன்று ஜூலை 19 முதல் ஜூலை 21 வரையிலான 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜூலை 19) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஜூலை 20): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

latest tamil news

ஜூலை 21: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் தாலுகா அலுவலகம், நடுவட்டம் பகுதியில் தலா 9 செ.மீ., கிளென்மார்கன், ஹரிசன் எஸ்டேட், சேரங்கோடு பகுதியில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

latest tamil news

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!
Next articleகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!