வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!!

0
195

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதாவது வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேலும் பருவ மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஒடிசாவில் சில பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும்
கூறப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறுமா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஇந்த  மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி!
Next articleதொடர் மழையால் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! தண்ணீரில் மிதக்கும் 31 கிராமங்கள்!